Oct 6, 2007

சுற்றுலா - அனுபவம் 1.

சுற்றுலா என்ற வார்த்தை கேட்டவுடன் உள்ளம் இப்பொழுதும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறது. புதிய மனிதர்கள், புதிய இடங்கள், புதிய விசயங்கள் என பல அனுபவங்கள் கிடைக்கும் என்றால் கசக்குமா என்ன! :)

பள்ளியில், கல்லூரியில், குடும்பத்துடன், நண்பர்களுடன் என ஒவ்வொரு காலகட்டத்திலும் எனக்கு கிடைத்த அனுபவங்கள் சுவையானவை. அப்படி அனுபவித்தவற்றில் காலம் கடந்து இன்றும் என் நினைவில் பசுமையாயிருக்கும் பல சில நினைவுகளைப்பற்றிய ஒரு அலசல் தொடர்...

நான் 6வது படிக்கும் போது மூன்று நாள் சுற்றுப்பயணமாக சென்னை சென்றதுதான் பள்ளியல் எனக்கு கிடைத்த முதல் அனுபவம். ஆசிரியர்களின் மேல் பார்வையில் சென்று வந்ததே வித்தியசமான ஒரு அனுபவம்.

நான் படித்தது ஒரு கிருத்துவப்பள்ளி என்பதால் அதன் முலம் ஏற்பாடு செய்யபட்ட ஒரு கிருத்துவ ஆலயத்தில் இரவு தங்கினோம்.

பள்ளிச்சுற்றுலா என்பதால் 'VGP Golder Beach'க்கு பள்ளிச்சீறுடையில் சென்றோம். அப்பொழுது எல்லாம் ஒவ்வொரு நுலைவுச்சீட்டுக்கு காலை உணவு இலவசம். கூட்டம் அதிகமானதால் தோசைக்கும் பூரிக்கும் போட்டி போட்டோம்.

அவருக்காக நான் வாங்கி வந்த சிமிக்கி கம்மலை இன்னமும் பத்திரமாக வைத்திருக்கிறார் என் அம்மா. அம்மா எனக்கு செலவுக்காக கொடுத்த ரூ. 100க்கு கணக்கு எழுதச் சொன்னது இன்னமும் என் நினைவில் பசுமையாய்.

வீட்டுக்கு திரும்பியவுடன் களைப்பில் தூங்கி விட்டேன். அம்மா என்னை எழுப்பி சாப்பிட சொல்லீட்டு அலுவலகம் சென்றார்கள். மாலை அவர் திரும்பி வந்து எழுப்பும் வரை தூங்கிக் கொண்டிருந்தேன்.

No comments: