Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts

Oct 22, 2007

சுற்றுலா - அனுபவம் 3.

கல்லூரி வாழ்க்கையில் தான் தென்னிந்திய எல்லைக்குள் வட்டமடித்துக் கொண்டிருந்த என் சுற்றுலா மோகம் முதல் முறையாக எல்லை கடக்க ஆரம்பித்தது.

'MCA' இரண்டாமாண்டில் டெல்லி, சிம்லா மற்றும் குலுமணாலி சென்று 10 நாட்கள் சுற்றித் திரிந்தோம். புது இடம்கள், புது மொழிகள், புது தட்பவெப்பம் நிலை, புது உணவு பழக்கங்கள் என அனுபவங்கள் பல நிறைந்த பயணமாக ஆமைந்தது. இந்த பயணம் என் கல்லூரி வாழ்க்கையின் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று.

உறையும் குளிரிலும் வீம்பு சவால்கள், பனியின் உறம் பார்த்த எங்கள் வீரம், பேருந்தில் 'அரசு'வின் லீலை, இரயில் பயணத்தில் நண்பர்களுடன் செய்த குறும்புகள், 'Kashmir' மக்களின் பாரம்பரிய உடை அணிந்து போட்ட ஆட்டம், பனிச்சறுக்கல்கள், இரவு உணவாக 12 மணிக்கு சாப்பிட்ட 'குல்வி' என பசுமையான நினைவுகள் பல உண்டு.

Oct 10, 2007

சுற்றுலா - அனுபவம் 2.

விசு 'SBI'யில் வேலை செய்து வந்ததால் அவருக்கு கிடைத்த சலுகையை பயண்படுத்தும் விதமாக இரண்டாண்டுக்கு ஒரு முறை நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருந்தோம்.

குடும்பத்தினருடன் ஊர் சுற்றும் அனுபவம் நண்பர்களுடன் செல்வதை விட முற்றிலும் வேறுபட்டது. நம் வயதில் துணையில்லாத நேரங்களில் பெரியவர்களின் துணை நாடினோம். பயணம் செய்யும் போது ஆட்டம் பாட்டம் இருக்காது. வண்டியில் அமைதியாக அமர்ந்து கொண்டு வர வேண்டும். அப்பாவுக்கு பயந்து கொண்டே 'Audio Volume'ஐ அதிக்கப்படுத்துவோம். 407 வேனில் முன்னிருக்கைக்கு நானும் ரகுவும் சண்டை போடுவோம்.

ஒரு முறை மைசூர் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு இரவு பயணித்துக்கோண்டிருந்தோம். தூங்கிக்கொண்டிருந்த அனைவரும் அப்பாவின் அலரல் கேட்டு எழுந்துவிட்டோம். பின்னர் தான் தெரிய வந்தது எங்களுடன் சேர்ந்து 'driver'ரும் தூங்கி விட்டார் என்பது. :) அன்று மட்டும் அப்பா சரியான நேரத்தில் சுதாரித்திருக்காவிட்டால் இன்று நான் இதை பதித்துக் கொண்டிருக்க மாட்டேன்!

Oct 6, 2007

சுற்றுலா - அனுபவம் 1.

சுற்றுலா என்ற வார்த்தை கேட்டவுடன் உள்ளம் இப்பொழுதும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறது. புதிய மனிதர்கள், புதிய இடங்கள், புதிய விசயங்கள் என பல அனுபவங்கள் கிடைக்கும் என்றால் கசக்குமா என்ன! :)

பள்ளியில், கல்லூரியில், குடும்பத்துடன், நண்பர்களுடன் என ஒவ்வொரு காலகட்டத்திலும் எனக்கு கிடைத்த அனுபவங்கள் சுவையானவை. அப்படி அனுபவித்தவற்றில் காலம் கடந்து இன்றும் என் நினைவில் பசுமையாயிருக்கும் பல சில நினைவுகளைப்பற்றிய ஒரு அலசல் தொடர்...

நான் 6வது படிக்கும் போது மூன்று நாள் சுற்றுப்பயணமாக சென்னை சென்றதுதான் பள்ளியல் எனக்கு கிடைத்த முதல் அனுபவம். ஆசிரியர்களின் மேல் பார்வையில் சென்று வந்ததே வித்தியசமான ஒரு அனுபவம்.

நான் படித்தது ஒரு கிருத்துவப்பள்ளி என்பதால் அதன் முலம் ஏற்பாடு செய்யபட்ட ஒரு கிருத்துவ ஆலயத்தில் இரவு தங்கினோம்.

பள்ளிச்சுற்றுலா என்பதால் 'VGP Golder Beach'க்கு பள்ளிச்சீறுடையில் சென்றோம். அப்பொழுது எல்லாம் ஒவ்வொரு நுலைவுச்சீட்டுக்கு காலை உணவு இலவசம். கூட்டம் அதிகமானதால் தோசைக்கும் பூரிக்கும் போட்டி போட்டோம்.

அவருக்காக நான் வாங்கி வந்த சிமிக்கி கம்மலை இன்னமும் பத்திரமாக வைத்திருக்கிறார் என் அம்மா. அம்மா எனக்கு செலவுக்காக கொடுத்த ரூ. 100க்கு கணக்கு எழுதச் சொன்னது இன்னமும் என் நினைவில் பசுமையாய்.

வீட்டுக்கு திரும்பியவுடன் களைப்பில் தூங்கி விட்டேன். அம்மா என்னை எழுப்பி சாப்பிட சொல்லீட்டு அலுவலகம் சென்றார்கள். மாலை அவர் திரும்பி வந்து எழுப்பும் வரை தூங்கிக் கொண்டிருந்தேன்.

Sep 14, 2007

நட்பு - கல்லூரி.

ஒவ்வொரு பள்ளி மாணவனைப்போல எனக்கும் கல்லூரி என்பது வேற்று உலகமாகத்தான் இருந்தது. செலவில்லாமல் கிடைத்த பல அறிவுறைகள், சில பயமுறுத்தல்கள், நிறையா எதிரிப்பார்ப்புக்களுடன் ஆரம்பமானது எனது கல்லூரிப் பயணம். முதல் முறையாக விடுதியில் தங்கி படிக்கப்போகிறோம் என்ற எதிரிபார்ப்பு வேறு.

கையில் பணம், தூரத்தில் பெற்றோர், கண்டிப்பில்லாத ஆசிரியர்கள், நெருங்கிப் பழக பெண்கள் என கல்லூரியில் வாழ்க்கை திசை மாற வழிகளுக்கு பஞ்சமில்லை. மணம் அலைபாயும் வயதில் நல்வழி செல்ல நல்ல நண்பர்கள் வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஒரு நல்ல நண்பர்கள் கூட்டம் கிடைத்தது என் யோகம்.

கோபி மற்றும் கோவை என இரண்டுமே எனக்கு நிறையா புதிய அனுபவங்களைத் தந்தது. புதுப்புது மனிதர்கள், புதுப்புது சிந்தனைகள், புதுப்புது திறமைகள் என வாழ்க்கைக் கல்வி கற்ற காலமிது.

கல்லூரி வாழ்விலுள்ள எந்த சுகதுக்கங்களையும் நாங்கள் தவறவிட்வில்லை. கேலி கிணடல் கும்மாலம் என அனைத்தையும் அனுபவித்தோம். நண்பன் வீட்டு எவ்வளவு தூரமானாலும் அவன் வீட்டு விசேசத்துக்கு நாங்கள் ஆசராகிவிடுவோம். நண்பனோடு மட்டுமில்லாமல் அவனுடைய குடும்பத்துடனும் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். இப்படி ஆரம்பித்த பல நட்பு என்னைக் கடந்து என் குடும்ப நட்பாகவே பிற்காலத்தில் மாறியது.

என் எதிர்காலத்தை எனக்கு காட்டியது, நிகழ்காலத்தை மகிழ்ச்சியாய் மாற்றியது, கல்லூரியைத் தாண்டி நிலைத்து நிற்க்கிறது இந்த நட்பு..

Sep 12, 2007

நட்பு - அக்கம்பக்கம்.

பள்ளக்கூடத்தில் நண்பர்கள் இருந்தாலும் விடுமுறைகளில் நேரத்தை வீண்ணடிக்க வீட்டுக்குப் பக்கத்தில் வெட்டி பசங்க யாரும் இல்லாட்டி எப்படி!

திருப்பூர் - கொங்கு நகரில் என் நண்பர்களுடன் நான் போட்ட ஆட்டம் எக்கச்சக்கம். கோழி குண்டு, கிள்ளிந்தாண்டு, திருடன் போலீஸ், மசபந்துனு,... அனைத்தும் ஒலிம்பிக்கில் இடம் பிடிக்க வேண்டிய முத்தான விளையாட்டுக்கள். சாப்பாட்டை மறந்து! வீட்டை மறந்து! முக்கியமா படிப்பை மறந்து! ;)

நண்பர்கள் ஒன்னு சேர்ந்துட்ட கண்டிப்பா குறும்புகளுக்கு பஞ்சமேயிருக்காது. 'சின்னமாயி அரசு மேல் நிலைப்பள்ளி' இரும்புக்கதவுகளை ஏறி குதித்து கிரிக்கெட் விளையாடியது, சதுரங்கத்தில் தோற்றதுக்காக காய்களை எரித்தது, சுடுகாட்டிலிருந்து எழும்புகளை எடுத்து வந்து மற்றவர்களை பயமுறுத்துவது, அண்ணனுடைய நண்பருடன் சேர்ந்து Motor Boadவிட்டு விளையாடியதில் வீட்டை மறந்தது, ... என இதுவும் ஒரு நெடுந் தொட்ர்.

திருப்பூர் - காந்தி நகரில் அருகிலிருந்தவர்கள் அனைவரும் என் அம்மாவுடன் பணிபுரிந்தவர்கள். ஆதனாலொ என்னவோ வயதாக ஆக போட்டி, பொறாமையும் அதிகரித்தது. நண்பர்களாயிருந்தவர்கள் காலப்போக்கில் அந்நியனானார்கள். பகல் என்று ஒன்று இருந்தால் இரவு என்று ஒன்று இருக்கவேண்டுயாதுதான்!

Sep 10, 2007

நட்பு - பள்ளிக்கூடம்.

'உன் நண்பன் யார் என்று சொல் உன்னை பற்றி சொல்கிறேன்!'

ஒருவன் வாழ்வில் நட்பு என்பது தவிர்க்கயியலாத ஒரு உறவு. சில நட்பு அவன் வாழ்வை வழிநடத்தும், சில நட்பு அவனை தீய வழி இழுத்துச் செல்லும். அவ்வாறு என் வாழ்வில் எனக்கு ஏற்ப்பட்ட நட்பைப் பற்றி ஒரு பதிப்புத் தொட்ர். இந்தப்பகுதியில் என் பள்ளிக்கூட நாட்பைப்பற்றி ஒரு மலரும் நினைவுகள்.

இந்த காலகட்டத்தில் எனக்கு ஏற்ப்பட்ட நட்பை நான் மழலைப்பருவ நட்பு மற்றும் மாணவப்பருவ நட்பு என்று இரு பிரிவுகளாக நான் பார்க்கிறேன். Kinder Garden முதல் ஐந்தாவது முடிய எனக்கு ஏற்ப்பட்ட நட்பு மழலை பருவம். அதன் பிறகு ஏற்ப்பட்டது மாணவப்பருவம்

மழலை நட்பு.
அன்னை மடி மறக்க ஆரம்பித்த பருவம் அது. தாய் தந்தை உறவுக்கு நடுவில் நட்பு நுலைந்த தருணம் அது. தினமும் காலையில் மலர்ந்து இறுதி மணி அடித்தவுடன் உதிர்ந்த நட்பு அது.

ரொம்ப கவிதை மாதிரி இருக்கு. என்னாலயே தாங்கமுடியவில்லை. :)

அப்போ எனக்கு நட்புனா என்னனுகூட தெரியாது. 'நிர்மலா Primary School'ல இருந்து நான் 'Bishop'க்கு மாறியபோது என் மழலை நட்பும் மாறிவிட்டது. நான் எந்த Schoolலில் சேரப்போகிறேன் என்று கூட சொல்லாமல் வந்துட்டேன். இந்த கட்டத்தில் பிரிந்தவர்களில் அனேகமானோர் என் நினைவில்/தொடர்பில் இப்பொழுதில்லை.

மாணவ நட்பு.
'Teen age' நட்பு தான் இது. சுதந்திரமாக வெளியில் சுற்ற அரம்பித்தபோது துணையாயிருந்தவர்கள் நண்பர்களானார்கள். எட்டாவது மற்றும் ஒன்பதாது வகுப்புகளில் விளையாட்டாயிருந்த நட்பு பத்தாவதுகளிலும், +2விலும் கூட்டுப்படிப்பு, சிறப்பு வகுப்புகள், தனி வகுப்புகள் என படிப்பில் கவனமாகயிருந்தோம்.

இந்த காலகட்டத்தில் தான் நட்பின் இலக்கணம் புரிய ஆரம்பித்தது. படிக்கும்போது ஒருவருக்கு ஒருவர் உதவுவது, பொதுத் தேர்வில் சரியாக எழுதாதவனுக்கு மற்றவர்கள் ஆறுதல் கூறுவது, உடம்புக்கு சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தவனைப் பார்க்க தினமும் 10 கிலோமீட்டர் சென்று வந்தது என பல உண்டு.

அவ்வப்போது சில தவறுகளையும் செய்தோம்; ஒரே மாதத்தில் 14 சினிமா, கூட்டுப்படிப்புன்னு சொல்லீட்டு விளையாட்டு, ஒரு சில 'தம்'. ஆனால் இப்பொழுது யாருடைய வாழ்க்கையும் வழிமாறவில்லை என்று நினைக்கும்போது மகிழ்ச்சி.

என்னடா ஒரு பெண்ணைப் பத்திக்கூட இவன் பேசலையே 'இவன் ரொம்ப நல்லவனோ!'னு முடிவு பண்ணீடாதீங்க. நான் படிச்சது பசங்க பள்ளிக்கூடங்க!