Apr 29, 2008

விடைகொடு!!!

இன்று, April 25, காலை எழுந்ததிலிருந்தே ஹேமாவின் முகம் பார்த்து பேச முடியாமல் தவிர்த்தேன். காரணம் பரபரப்பா? ஏக்கமா? இல்லை அழுது விடுவேனென்ற பயமா? எனக்கு புரியவில்லை. நிதானமாக செயல் படமுடியாமல் காலம் ஓட்டத்திற்கு ஏற்றார்போல் வேகமாக ஓடவேண்டியதாயிற்று. சுதாரித்து பார்த்த பொழுது மாலை மணி ஏழு. மீதி இருக்கும் சில மணி நேரத்தையாவது ஊரிலிருந்து வந்திருந்த அம்மா, அப்பா, மாமா, தரணி ஆகியோருடன் செலவிட முயற்சித்தேன்.

மிக நீண்ட நாளை நோக்கிய என் பயணம் சுமார் மாலை 9:30 மணிக்கு துவங்கியது. கிளம்பும்போதே ஏதோ உணர்ந்தவனாய் கிர்திக் என்னை தொற்றிக்கொண்டு யாரிடமும் போக மறுத்து விட்டான். அவனை ஏமாற்றித்தூங்க வைத்து ஹேமாவிடம் கொடுத்தேன். என் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்கவே, சிறிது நேரம் பேசிவிட்டு அனைவரிடமும் விடைபெற்று உள்ளே சென்றேன். நான் கூட்டத்தில் தொலைந்த பின்னரும் கையசைத்து விடைகொடுத்தார்கள் ஹேமாவும் அம்மாவும். அவர்கள் சென்ற பின்னரும் அவர்களை தேடி ஏமார்ந்தது என் கண்கள்.

விமான பயணத்தை பற்றிய சில குழந்தைத் தனமான என் கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்தன. உதாரணமாக நாம் பயணம் செய்யும் விமானத்தை எப்படிப் கண்டுபிடிப்பது? (எண் மற்றும் பெயர் பலகைகளோ இல்லையே? :) )

விமானத்தின் உள்ளமைப்பு நம்மவூர் 'Volvo' பேருந்துகளைப்போல இருந்தது. இந்திய அழகிகளை எதிர்பார்த்துப் போன எனக்கு அன்னிய முகங்களே வரவேற்றன. ஜன்னலோர இருக்கையும் கிடைத்தது. உலகை வேடிக்கை பார்க்க விடியும் வரை காத்திருக்க வேண்டும்.

முன்று மணி நேரம் தனிமைக்குப்பின் சுமார் நல்லிரவு 1:30 மணியளவில் சென்னையை அழகாகக் காட்டிவிட்டு தன் பயணத்தை தொடங்கியது 'லுவ்தான்சா'. 'Run way'யில் வேகமெடுத்த பொழுதும் 'Take-off' ஆனவுடன் எதிர் திசைக்கு திரும்பிய பொழுதும் 'Roller Coster' உணர்வு ஏற்பட்டது.

இன்றைய பரபரப்பின் அசதியில் பயணம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தூங்கிப்போனேன். கண் விழித்து பார்த்த பொழுது மங்களான ஒழியில் அனைத்து பயணிகளும் தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. என் ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தது. விடிந்து விட்டதா என அறிய ஜன்னல் கதவுகளை சற்றே திருந்த வினாடியில் வெளிச்சம் பரவியது. சற்றே பயந்தவனாய் அடைத்துவிட்டு மீண்டும் தூங்கிப்போனேன்.

Apr 20, 2008

ஆறே நாட்கள!!!

ஆறு வருட காத்திருந்த நான், என் முதல் வெள்நாட்டுப் பயணத்துக்காக இன்னும் ஒரு ஆறு நாட்கள் காத்திருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பதால், நான் செல்லும் நாடு 'அமெரிக்க'வாக அமைந்ததில் ஆச்சிரியமில்லை.

என் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள இந்த பயண அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன்.

Apr 12, 2008

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

உலகெங்குமுள்ள அனைத்து தமிழர்களுக்கும் எனதினிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

அரசியல் வேண்டாமே என்பதற்காக 'தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்' சொல்லவில்லை. :)

Apr 11, 2008

என் பெயரில் ஓரு இணையம்!

After many unsuccessful attempt to register a domain name, I finally found a good deal here and immediately brought 'agowrishankar.info'.

Few google search taught me how to link my new domain name to my blog. From now on, this blog can also be reach at 'blog.agowrishankar.info'.

Apr 1, 2008

My experiment with Macro!!!