விசு 'SBI'யில் வேலை செய்து வந்ததால் அவருக்கு கிடைத்த சலுகையை பயண்படுத்தும் விதமாக இரண்டாண்டுக்கு ஒரு முறை நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருந்தோம்.
குடும்பத்தினருடன் ஊர் சுற்றும் அனுபவம் நண்பர்களுடன் செல்வதை விட முற்றிலும் வேறுபட்டது. நம் வயதில் துணையில்லாத நேரங்களில் பெரியவர்களின் துணை நாடினோம். பயணம் செய்யும் போது ஆட்டம் பாட்டம் இருக்காது. வண்டியில் அமைதியாக அமர்ந்து கொண்டு வர வேண்டும். அப்பாவுக்கு பயந்து கொண்டே 'Audio Volume'ஐ அதிக்கப்படுத்துவோம். 407 வேனில் முன்னிருக்கைக்கு நானும் ரகுவும் சண்டை போடுவோம்.
ஒரு முறை மைசூர் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு இரவு பயணித்துக்கோண்டிருந்தோம். தூங்கிக்கொண்டிருந்த அனைவரும் அப்பாவின் அலரல் கேட்டு எழுந்துவிட்டோம். பின்னர் தான் தெரிய வந்தது எங்களுடன் சேர்ந்து 'driver'ரும் தூங்கி விட்டார் என்பது. :) அன்று மட்டும் அப்பா சரியான நேரத்தில் சுதாரித்திருக்காவிட்டால் இன்று நான் இதை பதித்துக் கொண்டிருக்க மாட்டேன்!
Oct 10, 2007
சுற்றுலா - அனுபவம் 2.
உங்கள் -
கௌரிசங்கர்
0
விமர்சனங்கள்
பிரிவு : தொடர்
ஐயோ! ஹேமாவா!!!
ஹேமா என்னுடன் பேச தொலைப்பேசியில் அழைத்தால் சந்தோசத்தில் துடித்த காலம் மாறி இப்போதெல்லாம் பயத்தில் கத்த ஆரம்பித்து விடுகிறது இதயம். :)
இந்த மாற்றத்துக்கு காரணம் வேறுயாறுமில்லை எங்கள் கிர்த்திக் தான். 'இன்று என்ன குறும்பு/இரகலை பண்ணினானோ?' என்ற பயம். ரசிக்கும்படியாக குறும்புகள் பல இருந்தாலும் நம்மை பயமுறுத்தும் குறும்புகளும் உண்டு.
சமிபத்தில் இரசித்தவை:
குடிக்கும் தண்ணீர் இருக்கும் 'bottle'ஐ தண்ணீருடன் கீழே சாய்த்தது.
காய்கறிகளை கீழே தள்ளி அதன் மேல் 'சொய்ய்ய்..' போனது.
ஹேமாவை செய்தித்தாள் படிக்க விடாமல் விளையாடச் சொன்னது.
சமிபத்தில் பயந்தவை:
'Live - Switch Board'ஐ உடைத்தது.
பெற்றோராய் எங்களுக்கு திரும்பக்கிடைக்காத இந்த நிகழ்வுகளை கவனமுடன் இரசித்துக்கொண்டிருக்கிறாம்!!!
உங்கள் -
கௌரிசங்கர்
0
விமர்சனங்கள்
பிரிவு : என் மகன்.
Oct 9, 2007
IRCTC - A Nightmare!
Train journey is the most comfortable when you want to travel overnight. Even a Volvo Executive buses couldn't provide a comfortable sleep better than a birth in train. The freedom of movement is another advantage that you have in train over buses.
The comfort was not with out a cost. ie. The ticket counters would always be crowded, needless to say the length of the queue during festival times. All the tickets would be booked within weeks. The lazy planners had to spend more to get hold of their births.
These days were history now due to the arrival of IRCTC. Planning the travel sitting at the computer would definitely give a great relief to the frequent travellers. But in reality, is it a comfortable zone as it looks to be?
I never booked a ticket on IRCTC without failing at least once. I believe many would agree with me. The worst case is when you have been credited for the ticket and ticket never booked. The pressure of losing money would spoil the day. The process/system in place for refunding of money for such unsuccessful attempt needs to be appreciated, you will get it back with no hassle.
The authorities should realize that online booking thru' irctc has become the most commonly used application and should enhance its performance to the benefit of the public. Will they hear this?
உங்கள் -
கௌரிசங்கர்
0
விமர்சனங்கள்
பிரிவு : My Corner
Oct 6, 2007
சுற்றுலா - அனுபவம் 1.
சுற்றுலா என்ற வார்த்தை கேட்டவுடன் உள்ளம் இப்பொழுதும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறது. புதிய மனிதர்கள், புதிய இடங்கள், புதிய விசயங்கள் என பல அனுபவங்கள் கிடைக்கும் என்றால் கசக்குமா என்ன! :)
பள்ளியில், கல்லூரியில், குடும்பத்துடன், நண்பர்களுடன் என ஒவ்வொரு காலகட்டத்திலும் எனக்கு கிடைத்த அனுபவங்கள் சுவையானவை. அப்படி அனுபவித்தவற்றில் காலம் கடந்து இன்றும் என் நினைவில் பசுமையாயிருக்கும் பல சில நினைவுகளைப்பற்றிய ஒரு அலசல் தொடர்...
நான் 6வது படிக்கும் போது மூன்று நாள் சுற்றுப்பயணமாக சென்னை சென்றதுதான் பள்ளியல் எனக்கு கிடைத்த முதல் அனுபவம். ஆசிரியர்களின் மேல் பார்வையில் சென்று வந்ததே வித்தியசமான ஒரு அனுபவம்.
நான் படித்தது ஒரு கிருத்துவப்பள்ளி என்பதால் அதன் முலம் ஏற்பாடு செய்யபட்ட ஒரு கிருத்துவ ஆலயத்தில் இரவு தங்கினோம்.
பள்ளிச்சுற்றுலா என்பதால் 'VGP Golder Beach'க்கு பள்ளிச்சீறுடையில் சென்றோம். அப்பொழுது எல்லாம் ஒவ்வொரு நுலைவுச்சீட்டுக்கு காலை உணவு இலவசம். கூட்டம் அதிகமானதால் தோசைக்கும் பூரிக்கும் போட்டி போட்டோம்.
அவருக்காக நான் வாங்கி வந்த சிமிக்கி கம்மலை இன்னமும் பத்திரமாக வைத்திருக்கிறார் என் அம்மா. அம்மா எனக்கு செலவுக்காக கொடுத்த ரூ. 100க்கு கணக்கு எழுதச் சொன்னது இன்னமும் என் நினைவில் பசுமையாய்.
வீட்டுக்கு திரும்பியவுடன் களைப்பில் தூங்கி விட்டேன். அம்மா என்னை எழுப்பி சாப்பிட சொல்லீட்டு அலுவலகம் சென்றார்கள். மாலை அவர் திரும்பி வந்து எழுப்பும் வரை தூங்கிக் கொண்டிருந்தேன்.
உங்கள் -
கௌரிசங்கர்
0
விமர்சனங்கள்
பிரிவு : தொடர்
Oct 4, 2007
வாரிய தாமதம்! :(
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாதம் பிறந்தவுடன் முதல் வாரத்துக்குள் மின்சாரக்கட்டணத்தை கட்டிவிடுவது என் பழக்கம், அதுக்கு பிறகு கூட்டம் அதிகம் ஆகிவிடும் என்பதால். ஆனால் இம்முறை என்னால் கட்டயியலவில்லை.
காரணம்: மின்சார ஊழியர்கள் 4ம் தேதி ஆகியும் இன்னமும் 'Computer'ரில் போன மாத 'Reading'ஐ Enter பண்ணாததுதான். கேட்டால் 'AE'விடம் 'complaint' செய்யுங்கள் என்று பொருப்பில்லாத பதில்கள் வேறு. அதேப்போல, கணிப்பொறி மயமக்கப்பட்டாலும் பணம் செலுத்தும் நேரம் குறையவில்லை என்ற குறையுமுண்டு.
மின்சார வாரியம் மட்டுமல்ல மற்ற அரசு அலுவலகங்களின் நிலையும் இதுதான். எப்பொழுது திருந்துமோ இந்த அரசு துறைகள்!!!
உங்கள் -
கௌரிசங்கர்
0
விமர்சனங்கள்
பிரிவு : கோபம்