Nov 2, 2007

யார் குற்றம்?

நான் சமீபத்தில் திரைக்கு வந்த 'கற்றது தமிழ்'யை இன்னமும் பார்க்கவில்லை என்றாலும் அதைப்பற்றிய விமர்சனம், இயக்குனர் பேட்டி பார்த்திருக்கிறேன். மென்போருள் துறையின் மீது மற்றவர்களுக்குள்ள கோபம் மற்றும் பொறாமையின் வெளிப்பாடாக அமைந்தது தான் இந்த திரைப்படம்.

விலைவாசி உயர்வுக்கு எங்கள் துறையினர் தான் முக்கிய காரணம் என்ற உணர்வு மக்களிடையே உள்ளதை யாராலும் மறுக்கயியலாது.

மென்போருள் ஊழியன் என்று தெரிந்தவுடன் வீட்டு வாடகையை உயர்த்தும் உரிமையாளர்கள் உண்டா, இல்லயா?

சொகுசு பேருந்தில் பயணம் செய்ய வரும் எங்கள் நண்பர்களிடம் அதிக விலைக்கு பயணச்சீட்டை விற்று லாபம் பார்க்கும் முதலாளிகள் உண்டா, இல்லயா?

'ரியல் எஸ்டேட்' என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பல் உண்டா, இல்லயா?

எங்கள் அலுவலகம் தேடி வந்து எங்களை கடனாளிகளாக்கும் வங்கிகள் உண்டா, இல்லயா?

இதையெல்லாம் சொல்லி விலை உயர்வுக்கு நாங்கள் காரணமில்லை என்று வாதாடவில்லை. நாங்கள் மட்டும் காரணமில்லை என்றே கூறுகிறேன்.

எங்களின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து விட்டு இந்த சமுகம் எங்களை விமர்சிக்கிறது.

படித்து முடித்து வேலை கிடைக்காமல் தவிக்கும் நண்பர்களை பற்றி அவர்களுக்கு தெரியாது.

இயலாதவர்களுக்கு (தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ) உதவும் எங்கள் நண்பர்களை பற்றி அவர்களுக்கு தெரியாது.

இரவு பகல் என்று பார்க்காமல் உழைக்கும் நண்பர்களை பற்றி அவர்களுக்கு தெரியாது.

பாசத்துக்கும் அரவனைப்புக்கும் ஏங்கும் நண்பர்களை பற்றி அவர்களுக்கு தெரியாது.

எங்களை அரவனைக்காவிட்டால் பரவாயில்லை சமூகமே! பழி கூறாதே!

2 comments:

Ravikumar K said...

Nenja Thottutada !!

S/w Engineer kalukkaga vathadum, Thalavar Vazhga!! Vazhga!!

Anonymous said...

அன்னாத்தே, எங்களுக்காண்டியும் கொரல் கொடுக்கர உன்ன நாங்க உசிர கொடுத்தாவது மொதலமைச்சர் ஆக்கிடுறோம்.

சாப்ட்வேர் மக்களின் வாழ்க்கைல லைட் ஏத்த வந்த அன்னாத்தே, வால்க! வாஆஆஆஆஆல்க!