Sep 25, 2007

மாறாத ஆவி!!!

தமிழில் மிக பிரபலமான வாரயிதழ்களில் ஆனந்த விகடனுக்கு (செல்லமாக : ஆவி) என்று ஒரு இடமுண்டு. மாலை நேர ஓய்வின் போது, விடுமுறை நாட்களில் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், பெரியவர்களும் என அனைவரையும் கவரும் ஒரு இதழ்.

ஒவ்வொரு வாரமும் சன் ஞாயிறுகளில் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த காலங்களும் உண்டு. என் பள்ளிக்காலங்களில் இருந்து நான் 'ஆவி' படித்து வருகிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வாரம் மீண்டும் படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இதழில் பிரசுரம் ஆகியிருந்த பல தொகுப்புகளில் பல மாறுதல்களிருந்த போதும் 'ஜொக்'களில் மற்றும் அவ்வளவு மாற்றமில்லை. இன்னமும் 'புறமுதுகிட்டு ஓடும் அரசர்', 'அலுவலகத்தில் தூங்கும் அரசு ஊழியர்', 'அறுவை சிகிச்சைக்கு பயந்த நோயாளி', 'மாமியார் மருமகள்',... என பல முறை அறைத்த மாவுகள் நிறையா உண்டு.

புதுமைகள் பல துறைகளில் புரட்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் 'சிரிப்பு' துணுக்குகளுக்கு மட்டும் ஏனிந்த பஞ்சமோ !!!

No comments: