Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Jul 19, 2008

ஓர் வரிச் சிந்தனைகள்...

௧) என்னருகில் நீயிருந்தால், உன்னருமை நான்னறியா.

௨) வெற்றி போதையை விட, தோல்வித் துயரம் நல்ல படிப்பினை.

௩) உம்மொழி சிறப்பறியா நீ எம்மொழி யறிந்தென்ன பயன்.

௪) சில தவறுகள் செய்தவர்களை விட, பல தவறுகள் செய்த உன்னை நீ அதிகம் நேசிக்கிறாய்.

Feb 14, 2008

காதல் ரோஜா!

குத்திய முள்ளின் வழி உணர்ந்தேன்
அவள் வாங்க மறுத்தபோது!

- எங்கேயோ கேட்ட கவிதை. ;)

Jan 31, 2008

முயற்சி - ஹைகூ!!!

குழந்தையை அடித்தாள் தாய்
மற்றவர்களை அடிக்கக்கூடாது என்பதர்காக!!!

Sep 30, 2007

புது முயற்சி.

அவன்
கொஞ்சல் சிரிப்பில் காவியம் கண்டேன்!
புரியா மொழியில் கவிதைகள் வரைந்தான்!
குறும்புப் பார்வையில் குற்றம் மறந்தேன்!
இருமலோசையில் இதயம் கணத்தேன்!
இல்லா நிமிடங்கள் இரண்டென கழித்தேன்!
'அப்பா' என்றழைக்க சொர்க்கம் உணர்ந்தேன்!
மழலை மொழி மறவா வேண்டுகிறேன்!

என்ன தவம் செய்தேனோ...