Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Jul 20, 2008

விமர்சனம் - என் அமெரிக்க பயணம்!

ஓர் முடிவை நோக்கிய என் மூன்று மாத கால நீண்ட பயணம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரப்போகிறது. படித்தது, கேட்டது, பார்த்ததை வைத்து எனக்குள் அமெரிக்க வாழ்க்கையைப் பற்றிய ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த எதிர்பார்ப்பையும் மீறி என்னை கவர்ந்த விசயங்கள் இதோ.

1) இங்கு பல விமானங்களில் வரிசை எண் 12க்கு அடுத்துள்ள வரிசை எண் 14. 13 என்பது இங்கு இராசியில்லாத எண் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம். (முடநம்பிக்கை உலகம் எங்கும் பறவிக்கிடக்கிறது.)

2) சராசரி அமெரிக்கனின் பார்வையில் இந்தியர்கள் அனைவரும் நன்று படித்தவர்கள். இதை என்னிடம் வெளிப்படுத்திய உந்தூர்தி ஓட்டுநர் சொன்ன இன்னொரு செய்தி இன்னமும் அதிர்ச்சிகரமாக இருந்தது. 'இந்தியதர்கள் அனைவரும் உடல் பருமனற்றவர்கள்.' (ஐயா, நீர் என் தேசம் வந்து பாரும்!!!)

3) இங்கு வாழும் என்னாட்டு சகோதரர்கள் எனக்கு தராத பரிசை அமெரிக்கர்கள் தந்தார்கள், புன்னகை.!!!

4) காலை மாலை மதியம் என கால நெரமில்லாமல் ஓட்டப்பயிற்சி செயயும் ஓர் கூட்டம். உடல் பருமனால் நடக்கக்கூட முடியாமல் சக்கர நாற்காலியில் போகும் ஓர் கூட்டம். (குறிப்பு : இரண்டாம் கூட்டத்தில் ஆட்கள் அதிகம்.)

5) இங்கு பள்ளி சிறுவர்கள் செல்லும் பேருந்துக்கு உரிய மரியாதை உண்டு. பேருந்தில் குழந்தைகள் ஏறும் போதும், இறங்கும் போதும் மற்ற வாகனங்கள் நின்று காத்திருக்க வேண்டும்.

Jun 26, 2008

எண்ணிக்கை ஆரம்பம்!!!

இன்னும் சரியாக ஒரு மாதகாலம் இருக்கிறது, என் தனிமையை தவிக்க விட; என் பிரிவுக்கு பிரியா விடை அழிக்க.

May 26, 2008

முதல் சுற்றுப் பயணம் - Baltimore!

இந்த தேசத்தில் நான் பார்த்தவை உங்கள் பார்வைக்கு!

May 12, 2008

இதோ 'அமேரிக்கா'!

ஹிட்லர் தேசத்துக்கு விடை கொடுத்து விட்டு விமானம் மெல்லமாக ஊர ஆரம்பித்து சில நிமிடங்களில் வந்த ஒரு அறிவிப்பு என்னை தூக்கி வாரிப்போட்டது. அந்த அறிவிப்பு 'வழிகாட்டும் கருவி பழுதடைந்து விட்டதால் விமானம் தாமதமாக கிளம்பும்'. கிளம்பறதுக்கு முன்னாடியே ஆப்பா!!!

நல்லபடியாக 30 நிமிடத்தில் பழுதை சரி செய்து விமானம் தன் பயணத்தை தொடர்ந்தது. விமானம் அதன் உயரத்தை அடைந்தவுடன் நான் ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த சிறிறுண்டி பரிமாறப்பட்டது. ஐயோ...! மறுபடியும் பொறி உரண்டையா!!!.

கொஞ்ச நேரத்தில் புட்டிகளை அடைத்து வைத்த வண்டியை பார்த்தவுடன் மணசுக்குள் ஒரு சமலம் எட்டி பார்த்தது. கட்டுப்படுத்தி 'diet pepsi' ஒன்றை வாங்கி குடித்தேன். நான் குடிக்கும் போது இப்படி வாய்ப்பெல்லாம் கிடைக்காது. :(

சன்னல் வழியாக கடலைப் பார்த்த போது நீல திறையில் வெள்ளை புள்ளிகளாய் ஏதோ தெரிந்தது. அது மீன் பிடிக்க வந்த கப்பல்களா?

'Washington - Dulles International Airport'யை அடைந்து, பாதுகாப்பு பரிசோதனைகளை கடந்து, என் பெட்டிகளை கைப்பற்றி வெளியேறினேன். என்னுடன் பயணித்த 'Verizon' நண்பரும் சேர்ந்து வாடகைக்கு கார் எடுத்தோம். ஓட்டுநராக ஒரு பாக்கிஸ்தான் நண்பர். செல்லும் வழியிலுள்ள இடங்களின் சிறப்புப்பற்றி கூறினார். கடைசியாக தங்கும் விடுதியை அடையும் போது மணி மாலை 4. அதாவது இந்திய நேரப்படி April 27, 1:30 AM. சுமார் 24 மணி நேர பயணம்.

May 1, 2008

ஹிட்லர் தேசம்!

விமானத்தில் காலை உணவுக்கு ஒரு பண், Omlette, கொஞ்சம் தயிர், சில வருத்த உருளை பரிமாறப்பட்டது. இதுதான் அவர்களுக்கு 'Asian Vegeterian Meal'. யானை பசிக்கு பொறி உருண்டை!

விமானத்திலிருந்த திரையில் 36000 அடி உயரத்தில் மணிக்கு சுமார் 550 மயில் வேகத்தில் பறப்பதாக காட்டியது. கிழே பூமியை பார்க்க வண்ணமடித்த உலக வரை படம் போல காட்சிதந்தது. மேகங்கள் காலடியில் தவழ்ந்து செல்வதை பார்க்கையில் இதமாயிருந்தது.

10 மணி நேர பயணத்திருக்குப் 'Frankfurt' விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான அழகிகள் புன்னகையுடன் வழியனுப்ப விடைபெற்றேன். ஹிட்லர் தேசத்து சுதந்திரக் காற்று சில்லென்று வருடியது. விமானத்திலிருந்து கண்ணாடிப் பேருந்துக்கு மாறியது பயணம். அது எங்களை அடுத்த இலக்குக்கு கூட்டிச்சென்றது. அங்விருந்த அறிவிப்பு பலகையில் 'வாசிங்டன்' செல்லும் எனது அடுத்த விமானத்தின் இருப்பிடம் மற்றும் கிளம்பும் நேரமறிந்தேன்.

அங்கே எப்படிப் போவது? ஐயோ! மொழி தெரியாத ஊரில் வழி தெரியாமல் அலையப்போகிறேன்!!! ஆனால் என் பயம் அர்த்தமற்றது என்பது சிறிது நேரத்தில் புரிந்தது. வழிகாட்டிப்பலகைகளை தொடர்ந்து சென்றாலே போது. விமான நிலையத்துக்குள் பயணிக்க பேருந்து மட்மல்ல தொடர் வண்டி சேவையுமுண்டு.

இரண்டு மணி நேர இடைவெளிக்குப்பின் என் பயணம் தொடர்ந்தது.

Apr 29, 2008

விடைகொடு!!!

இன்று, April 25, காலை எழுந்ததிலிருந்தே ஹேமாவின் முகம் பார்த்து பேச முடியாமல் தவிர்த்தேன். காரணம் பரபரப்பா? ஏக்கமா? இல்லை அழுது விடுவேனென்ற பயமா? எனக்கு புரியவில்லை. நிதானமாக செயல் படமுடியாமல் காலம் ஓட்டத்திற்கு ஏற்றார்போல் வேகமாக ஓடவேண்டியதாயிற்று. சுதாரித்து பார்த்த பொழுது மாலை மணி ஏழு. மீதி இருக்கும் சில மணி நேரத்தையாவது ஊரிலிருந்து வந்திருந்த அம்மா, அப்பா, மாமா, தரணி ஆகியோருடன் செலவிட முயற்சித்தேன்.

மிக நீண்ட நாளை நோக்கிய என் பயணம் சுமார் மாலை 9:30 மணிக்கு துவங்கியது. கிளம்பும்போதே ஏதோ உணர்ந்தவனாய் கிர்திக் என்னை தொற்றிக்கொண்டு யாரிடமும் போக மறுத்து விட்டான். அவனை ஏமாற்றித்தூங்க வைத்து ஹேமாவிடம் கொடுத்தேன். என் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்கவே, சிறிது நேரம் பேசிவிட்டு அனைவரிடமும் விடைபெற்று உள்ளே சென்றேன். நான் கூட்டத்தில் தொலைந்த பின்னரும் கையசைத்து விடைகொடுத்தார்கள் ஹேமாவும் அம்மாவும். அவர்கள் சென்ற பின்னரும் அவர்களை தேடி ஏமார்ந்தது என் கண்கள்.

விமான பயணத்தை பற்றிய சில குழந்தைத் தனமான என் கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்தன. உதாரணமாக நாம் பயணம் செய்யும் விமானத்தை எப்படிப் கண்டுபிடிப்பது? (எண் மற்றும் பெயர் பலகைகளோ இல்லையே? :) )

விமானத்தின் உள்ளமைப்பு நம்மவூர் 'Volvo' பேருந்துகளைப்போல இருந்தது. இந்திய அழகிகளை எதிர்பார்த்துப் போன எனக்கு அன்னிய முகங்களே வரவேற்றன. ஜன்னலோர இருக்கையும் கிடைத்தது. உலகை வேடிக்கை பார்க்க விடியும் வரை காத்திருக்க வேண்டும்.

முன்று மணி நேரம் தனிமைக்குப்பின் சுமார் நல்லிரவு 1:30 மணியளவில் சென்னையை அழகாகக் காட்டிவிட்டு தன் பயணத்தை தொடங்கியது 'லுவ்தான்சா'. 'Run way'யில் வேகமெடுத்த பொழுதும் 'Take-off' ஆனவுடன் எதிர் திசைக்கு திரும்பிய பொழுதும் 'Roller Coster' உணர்வு ஏற்பட்டது.

இன்றைய பரபரப்பின் அசதியில் பயணம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தூங்கிப்போனேன். கண் விழித்து பார்த்த பொழுது மங்களான ஒழியில் அனைத்து பயணிகளும் தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. என் ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தது. விடிந்து விட்டதா என அறிய ஜன்னல் கதவுகளை சற்றே திருந்த வினாடியில் வெளிச்சம் பரவியது. சற்றே பயந்தவனாய் அடைத்துவிட்டு மீண்டும் தூங்கிப்போனேன்.

Apr 20, 2008

ஆறே நாட்கள!!!

ஆறு வருட காத்திருந்த நான், என் முதல் வெள்நாட்டுப் பயணத்துக்காக இன்னும் ஒரு ஆறு நாட்கள் காத்திருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பதால், நான் செல்லும் நாடு 'அமெரிக்க'வாக அமைந்ததில் ஆச்சிரியமில்லை.

என் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள இந்த பயண அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன்.