Mar 6, 2008

தமிழ் - எண் வரிசை!

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வாழ்வது எல்லாம் தமிழ் நாட்டில் தான் என்றாலும் தமிழ் எண் வரிசையை நான் இது வரை படித்ததில்லை. தமிழ் எண்களை நான் சில தமிழ் ஆர்வலர்களின் வாகனப்பதிவு பலகைகளில் பார்த்ததோடு சரி!

என் தேடல்களுக்கு கிடைத்தவைகளை மற்றவர்கள் பார்வைக்காக இங்கு பதிக்கிறேன்.

பூசியத்திற்கு தமிழில் தனி குறியில்லை என்பதை அறியும்போது, பூசியம் கண்டுபிடிப்பதற்கு முன்பே இங்கு எண்கள் புலக்கத்தில் இருந்திருக்குமோ!

எண் வரிசை
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௱ = 100
௲ = 1000

இவைகளே தமிழ் எண் வரிசையின் உயிர் என்று செல்லலாம். மற்ற அனைத்து எண்களையும் இவைகளை கொண்டு குறியிடலாம். தமிழ் எண் வரிசையில் எண்களுக்கு இட மதிப்பு கிடையாது.

௰௧ = 11 (10 + 1)
௰௨ = 12 (10 + 2)
...
௨௰ = 20 (2 * 10)
௩௰ = 30 (3 * 10)
...
௨௱ = 200 (2 * 100)
௩௱ = 300 (3 * 100)

கொஞ்சம் கடினமான எடுத்துக்காட்டு, 349 = ௩௱௪௰௯.

No comments: