இன்று 'Savings Account' இல்லாதவர்கள் மிக குறைவு. இப்படி அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் இந்த சேமிப்பு திட்டத்தைப்பற்றிய விசயங்கள் அனேகமானவர்களுக்கு தெரியாது. அவர்களுக்காக...
எங்கு:
பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் இதர பணவுதவி நிறுவனங்கள் (தபால் நிலையம்).
பலன்கள்:
'Savings Account'லுள்ள பணம் என்பது பாதுகாப்புடன் வங்கியிலுள்ள பணம். எப்பொழுதும் பணத்தை எடுக்கவும் போடலும் முடியும்.
எந்த அபாயங்களிலும் நாம் நம் பணத்தை இலக்க மாட்டோம். எல்லா வங்கிகளும் காப்பீடு செய்யப்பட்டிருக்கும்.
குறைந்த வட்டியே ஆனாலும் நம் பணத்தை வைத்திருப்பதுக்காக வங்கிகள் நமக்கு அறையாண்டுக்கு ஒரு முறை வட்டி சேலுத்தும்.
வட்டி கணக்கிடும் முறை:
ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி முதல் கடைசி நாள் வரை நம் வங்கிக்கணக்கிலிருந்த குறைந்தபட்ச பணத்திற்கு வட்டி கணக்கிடப்படும்.
வட்டி விகிதம் 3.5 %. ரூ. 50,000 மேல் 5.4 %. (மாற்றங்களுக்கு உட்பட்டது.)
ஆக, அதிக பயணடைய பணத்தை வங்கிக்கணக்கில் 10ம் தேதிக்குள் செலுத்துவது நல்லது. உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
Mar 12, 2008
Savings Account - ஒரு ஆய்வு.
பிரிவு : My Corner
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment