Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Jul 21, 2008

சற்றே சிந்தியுங்கள்

வியாபார நிமித்தமாக வெளி மாநிலத்துக்கோ வேறு தேசத்துக்கோ போகும் பொழுது அங்குள்ள வட்டார மொழியை கற்று தொழில் செய்வது ஒரு வியாபார தந்திரமாகவே ஒரு காலத்திலிருந்தது. இப்படியிருக்கையில் வியாபாரம் செய்ய நம் தேசம் வந்த ஆங்கிலேயின் மொழியை நாம் ஏன் கற்றோம்?

ஆங்கிலத்தை ஆங்கிலேயனுக்கு அடுத்த படியாக சரியாக பேசுவது இந்தியன். பெருமைப்படுவோருக்கு ஓரு கேள்வி. உங்கள் தாய்மொழியில் உங்கள் புலமை எப்படி?

இந்தியா வளர்ச்சிக்கு ஆங்கிலம் அவசியம் தேவை என்றால் ஆங்கிலத்தின் துணையில்லாமல் வளர்ந்து நிற்கும் சப்பானையும் சீனாவையும் பாருங்கள்.

மற்ற தேசத்தினர் ஆங்கிலத்தை வியாபாரத்துக்காக கற்றால் நாம் மட்டும் கௌரவத்துக்காக கற்கிறோம். ஏன் இந்த ஆங்கில மோகம்? சற்றே சிந்தியுங்கள்!!!

Apr 12, 2008

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

உலகெங்குமுள்ள அனைத்து தமிழர்களுக்கும் எனதினிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

அரசியல் வேண்டாமே என்பதற்காக 'தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்' சொல்லவில்லை. :)

Mar 17, 2008

ரசித்ததில் சில துளிகள்.

விசய் தொலைக்காட்சியின் 'தமிழ் பேச்சு - எங்கள் முச்சு'ல் கேட்டதில் ரசித்தவை.

1) வேற்று பொழியினரிடம் 'வணக்கம்' சொல்வது முட்டாள்தனம். தாய் தந்தையிடம் 'Good Morning' சொல்வது அடிமுட்டாள்தனம்.

2) மனிதனும் விலங்கும் செய்து கொண்டால் அது 'கலப்புத்திருமணம்'. மனிதனும் மனிதனும் செய்து கொண்டால் அது 'சீர்திருத்தக் கல்யாணம்' - பெரியார்.

Mar 13, 2008

அகராதி!

எப்பொழும் 'தமிங்கலம்' மட்டுமே பேசிகிறோம், கேட்கிறோம். நம்மை அறியாமலே, சிலபல ஆங்கில வார்த்தைகளை தமிழோடு கூட்டணி வைத்துக்கொள்ள அனுமதி கொடுத்துவிட்டோம். அவ்வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வாத்தைகளையும் மறந்து விட்டோம். அவ்வார்த்தைகளை ஞாபகபடுத்தும் ஒரு முயற்சியான "அகராதி" என்ற ஒரு குறும்பதிப்பை இங்கு இணைக்கிறேன்.

தம்ழாக்கம் செய்ய கடிணமானதாக தோன்றிய வார்த்தைகள் அதற்கு இணையான தமிழ் சொற்களும் வரிசை படுத்தப்போகிறேன். இது என் தனிப்பட்ட முயற்சி.

Mar 6, 2008

தமிழ் - எண் வரிசை!

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வாழ்வது எல்லாம் தமிழ் நாட்டில் தான் என்றாலும் தமிழ் எண் வரிசையை நான் இது வரை படித்ததில்லை. தமிழ் எண்களை நான் சில தமிழ் ஆர்வலர்களின் வாகனப்பதிவு பலகைகளில் பார்த்ததோடு சரி!

என் தேடல்களுக்கு கிடைத்தவைகளை மற்றவர்கள் பார்வைக்காக இங்கு பதிக்கிறேன்.

பூசியத்திற்கு தமிழில் தனி குறியில்லை என்பதை அறியும்போது, பூசியம் கண்டுபிடிப்பதற்கு முன்பே இங்கு எண்கள் புலக்கத்தில் இருந்திருக்குமோ!

எண் வரிசை
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௱ = 100
௲ = 1000

இவைகளே தமிழ் எண் வரிசையின் உயிர் என்று செல்லலாம். மற்ற அனைத்து எண்களையும் இவைகளை கொண்டு குறியிடலாம். தமிழ் எண் வரிசையில் எண்களுக்கு இட மதிப்பு கிடையாது.

௰௧ = 11 (10 + 1)
௰௨ = 12 (10 + 2)
...
௨௰ = 20 (2 * 10)
௩௰ = 30 (3 * 10)
...
௨௱ = 200 (2 * 100)
௩௱ = 300 (3 * 100)

கொஞ்சம் கடினமான எடுத்துக்காட்டு, 349 = ௩௱௪௰௯.