Mar 28, 2008

இந்தியர்களின் திறமை!

Micheal Shcumaker Formula 1 பந்தயங்களில் சாதணையாளராக இருக்கலாம், அவரால் இந்த சவாலை ஏற்க முடியுமா?

Mar 26, 2008

எங்கே நான்???

என்னால என்னையே கண்டுபிடிக்க முடியவில்லை, யாராவது உதவி செய்யுங்களே????



உபயம்: மம்மி.

Mar 17, 2008

ரசித்ததில் சில துளிகள்.

விசய் தொலைக்காட்சியின் 'தமிழ் பேச்சு - எங்கள் முச்சு'ல் கேட்டதில் ரசித்தவை.

1) வேற்று பொழியினரிடம் 'வணக்கம்' சொல்வது முட்டாள்தனம். தாய் தந்தையிடம் 'Good Morning' சொல்வது அடிமுட்டாள்தனம்.

2) மனிதனும் விலங்கும் செய்து கொண்டால் அது 'கலப்புத்திருமணம்'. மனிதனும் மனிதனும் செய்து கொண்டால் அது 'சீர்திருத்தக் கல்யாணம்' - பெரியார்.

Mar 13, 2008

அகராதி!

எப்பொழும் 'தமிங்கலம்' மட்டுமே பேசிகிறோம், கேட்கிறோம். நம்மை அறியாமலே, சிலபல ஆங்கில வார்த்தைகளை தமிழோடு கூட்டணி வைத்துக்கொள்ள அனுமதி கொடுத்துவிட்டோம். அவ்வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வாத்தைகளையும் மறந்து விட்டோம். அவ்வார்த்தைகளை ஞாபகபடுத்தும் ஒரு முயற்சியான "அகராதி" என்ற ஒரு குறும்பதிப்பை இங்கு இணைக்கிறேன்.

தம்ழாக்கம் செய்ய கடிணமானதாக தோன்றிய வார்த்தைகள் அதற்கு இணையான தமிழ் சொற்களும் வரிசை படுத்தப்போகிறேன். இது என் தனிப்பட்ட முயற்சி.

Mar 12, 2008

Savings Account - ஒரு ஆய்வு.

இன்று 'Savings Account' இல்லாதவர்கள் மிக குறைவு. இப்படி அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் இந்த சேமிப்பு திட்டத்தைப்பற்றிய விசயங்கள் அனேகமானவர்களுக்கு தெரியாது. அவர்களுக்காக...

எங்கு:
பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் இதர பணவுதவி நிறுவனங்கள் (தபால் நிலையம்).

பலன்கள்:
'Savings Account'லுள்ள பணம் என்பது பாதுகாப்புடன் வங்கியிலுள்ள பணம். எப்பொழுதும் பணத்தை எடுக்கவும் போடலும் முடியும்.

எந்த அபாயங்களிலும் நாம் நம் பணத்தை இலக்க மாட்டோம். எல்லா வங்கிகளும் காப்பீடு செய்யப்பட்டிருக்கும்.

குறைந்த வட்டியே ஆனாலும் நம் பணத்தை வைத்திருப்பதுக்காக வங்கிகள் நமக்கு அறையாண்டுக்கு ஒரு முறை வட்டி சேலுத்தும்.

வட்டி கணக்கிடும் முறை:
ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி முதல் கடைசி நாள் வரை நம் வங்கிக்கணக்கிலிருந்த குறைந்தபட்ச பணத்திற்கு வட்டி கணக்கிடப்படும்.

வட்டி விகிதம் 3.5 %. ரூ. 50,000 மேல் 5.4 %. (மாற்றங்களுக்கு உட்பட்டது.)

ஆக, அதிக பயணடைய பணத்தை வங்கிக்கணக்கில் 10ம் தேதிக்குள் செலுத்துவது நல்லது. உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

Mar 10, 2008

Bloggerல் எனக்குப் புதியவை!

கடந்த இரண்டு நாட்களாக நான் இந்த பதிப்பில் புதிய விசயங்களை சேர்த்திருக்கிறேன். அவற்றின் இணைய வழி.

'PICASA' புகைப்படத் தோகுப்பை இணைக்க.

நிறைவுகள்:
பக்கத்திற்கு அடக்கமாக உள்ளது.
புகைப்படங்களை மாற்றும் வேகம்.

குறைகள்:
ஒரே ஒரு தொகுப்பு அல்லது அனைத்து தொகுப்புகள் என்ற கட்டுப்பாடு.
அனைத்து தொகுப்புகளெனின் ஒவ்வொரு தொகுப்புகளிலிருந்து முதல் படத்தை மட்டும் தேர்ந்தெடுத்துக் காட்டுவது.

யோகப்பதிப்பை கண்டறிய.

குறைகள்:
பார்வையாளர்களுக்கு யோகப்பதிப்பின் தலைப்பு முன்கூட்டியே தெரியாமலிருப்பது.

'Gtalk' முலம் உங்களை அனுக.

நிறைவுகள்:
பக்கத்திற்கு அடக்கமாகவும் அழகாகவும் உள்ளது.

குறைகள்:
நிலை மாறாமலிருப்பது.

கடைசி சில விமர்சனங்கள்.

Mar 6, 2008

தமிழ் - எண் வரிசை!

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வாழ்வது எல்லாம் தமிழ் நாட்டில் தான் என்றாலும் தமிழ் எண் வரிசையை நான் இது வரை படித்ததில்லை. தமிழ் எண்களை நான் சில தமிழ் ஆர்வலர்களின் வாகனப்பதிவு பலகைகளில் பார்த்ததோடு சரி!

என் தேடல்களுக்கு கிடைத்தவைகளை மற்றவர்கள் பார்வைக்காக இங்கு பதிக்கிறேன்.

பூசியத்திற்கு தமிழில் தனி குறியில்லை என்பதை அறியும்போது, பூசியம் கண்டுபிடிப்பதற்கு முன்பே இங்கு எண்கள் புலக்கத்தில் இருந்திருக்குமோ!

எண் வரிசை
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௱ = 100
௲ = 1000

இவைகளே தமிழ் எண் வரிசையின் உயிர் என்று செல்லலாம். மற்ற அனைத்து எண்களையும் இவைகளை கொண்டு குறியிடலாம். தமிழ் எண் வரிசையில் எண்களுக்கு இட மதிப்பு கிடையாது.

௰௧ = 11 (10 + 1)
௰௨ = 12 (10 + 2)
...
௨௰ = 20 (2 * 10)
௩௰ = 30 (3 * 10)
...
௨௱ = 200 (2 * 100)
௩௱ = 300 (3 * 100)

கொஞ்சம் கடினமான எடுத்துக்காட்டு, 349 = ௩௱௪௰௯.

Mar 3, 2008

தமிழ் பேச்சு - எங்கள் மூச்சு!

பெண்களை தொலைக்காட்சி மூன் கட்டிப்போட்டு இரவு நேரங்களில் வீட்டை ஆட்சி செய்த நெடுந்தொடர்களுக்கு மத்தியில் வித்தியாசம் காட்டியது 'Start Vijay'. 'சினிமாயில்லாத பொழுதுபோக்கு நிகழ்ச்சியா?' எனற விதிகளுக்குக் கட்டுப்படாமல 'அழகி', 'கலக்கப்போலது யாரு?', 'நீயா நானா', போன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்கு தமிழ் வடிவம் தந்தார்கள்.

இந்த வரிசையில் இப்பொழுது முத்திரை பதிக்க வந்துள்ளது 'தமிழ் பேச்சு - எங்கள் மூச்சு!'. மக்களிடமுள்ள தமிழ் அறிவை மேடை ஏற்றும் முயற்சி இது. ஏற்ற தகுதியுள்ள நாடுவர்கள். திறமை படைத்த போட்டியாளர்கள்.

தமிழ் அலைவரிசைகளில் தமிழைக் கொல்லும் தொகுப்பாளர்கள் மத்தியில் தமிழையே மையமாகக் கொண்டு ஒரு நிகழ்ச்சி என்ற முயற்சிக்கு பல பாராட்டுக்கள்.