Sep 10, 2007

நட்பு - பள்ளிக்கூடம்.

'உன் நண்பன் யார் என்று சொல் உன்னை பற்றி சொல்கிறேன்!'

ஒருவன் வாழ்வில் நட்பு என்பது தவிர்க்கயியலாத ஒரு உறவு. சில நட்பு அவன் வாழ்வை வழிநடத்தும், சில நட்பு அவனை தீய வழி இழுத்துச் செல்லும். அவ்வாறு என் வாழ்வில் எனக்கு ஏற்ப்பட்ட நட்பைப் பற்றி ஒரு பதிப்புத் தொட்ர். இந்தப்பகுதியில் என் பள்ளிக்கூட நாட்பைப்பற்றி ஒரு மலரும் நினைவுகள்.

இந்த காலகட்டத்தில் எனக்கு ஏற்ப்பட்ட நட்பை நான் மழலைப்பருவ நட்பு மற்றும் மாணவப்பருவ நட்பு என்று இரு பிரிவுகளாக நான் பார்க்கிறேன். Kinder Garden முதல் ஐந்தாவது முடிய எனக்கு ஏற்ப்பட்ட நட்பு மழலை பருவம். அதன் பிறகு ஏற்ப்பட்டது மாணவப்பருவம்

மழலை நட்பு.
அன்னை மடி மறக்க ஆரம்பித்த பருவம் அது. தாய் தந்தை உறவுக்கு நடுவில் நட்பு நுலைந்த தருணம் அது. தினமும் காலையில் மலர்ந்து இறுதி மணி அடித்தவுடன் உதிர்ந்த நட்பு அது.

ரொம்ப கவிதை மாதிரி இருக்கு. என்னாலயே தாங்கமுடியவில்லை. :)

அப்போ எனக்கு நட்புனா என்னனுகூட தெரியாது. 'நிர்மலா Primary School'ல இருந்து நான் 'Bishop'க்கு மாறியபோது என் மழலை நட்பும் மாறிவிட்டது. நான் எந்த Schoolலில் சேரப்போகிறேன் என்று கூட சொல்லாமல் வந்துட்டேன். இந்த கட்டத்தில் பிரிந்தவர்களில் அனேகமானோர் என் நினைவில்/தொடர்பில் இப்பொழுதில்லை.

மாணவ நட்பு.
'Teen age' நட்பு தான் இது. சுதந்திரமாக வெளியில் சுற்ற அரம்பித்தபோது துணையாயிருந்தவர்கள் நண்பர்களானார்கள். எட்டாவது மற்றும் ஒன்பதாது வகுப்புகளில் விளையாட்டாயிருந்த நட்பு பத்தாவதுகளிலும், +2விலும் கூட்டுப்படிப்பு, சிறப்பு வகுப்புகள், தனி வகுப்புகள் என படிப்பில் கவனமாகயிருந்தோம்.

இந்த காலகட்டத்தில் தான் நட்பின் இலக்கணம் புரிய ஆரம்பித்தது. படிக்கும்போது ஒருவருக்கு ஒருவர் உதவுவது, பொதுத் தேர்வில் சரியாக எழுதாதவனுக்கு மற்றவர்கள் ஆறுதல் கூறுவது, உடம்புக்கு சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தவனைப் பார்க்க தினமும் 10 கிலோமீட்டர் சென்று வந்தது என பல உண்டு.

அவ்வப்போது சில தவறுகளையும் செய்தோம்; ஒரே மாதத்தில் 14 சினிமா, கூட்டுப்படிப்புன்னு சொல்லீட்டு விளையாட்டு, ஒரு சில 'தம்'. ஆனால் இப்பொழுது யாருடைய வாழ்க்கையும் வழிமாறவில்லை என்று நினைக்கும்போது மகிழ்ச்சி.

என்னடா ஒரு பெண்ணைப் பத்திக்கூட இவன் பேசலையே 'இவன் ரொம்ப நல்லவனோ!'னு முடிவு பண்ணீடாதீங்க. நான் படிச்சது பசங்க பள்ளிக்கூடங்க!

2 comments:

Anonymous said...

மழலை. not மலழை :-)
Otherwise a nice post

கௌரிசங்கர் said...

திருத்தி விட்டேன். நன்றீடா மம்மி.