ஒவ்வொரு பள்ளி மாணவனைப்போல எனக்கும் கல்லூரி என்பது வேற்று உலகமாகத்தான் இருந்தது. செலவில்லாமல் கிடைத்த பல அறிவுறைகள், சில பயமுறுத்தல்கள், நிறையா எதிரிப்பார்ப்புக்களுடன் ஆரம்பமானது எனது கல்லூரிப் பயணம். முதல் முறையாக விடுதியில் தங்கி படிக்கப்போகிறோம் என்ற எதிரிபார்ப்பு வேறு.
கையில் பணம், தூரத்தில் பெற்றோர், கண்டிப்பில்லாத ஆசிரியர்கள், நெருங்கிப் பழக பெண்கள் என கல்லூரியில் வாழ்க்கை திசை மாற வழிகளுக்கு பஞ்சமில்லை. மணம் அலைபாயும் வயதில் நல்வழி செல்ல நல்ல நண்பர்கள் வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஒரு நல்ல நண்பர்கள் கூட்டம் கிடைத்தது என் யோகம்.
கோபி மற்றும் கோவை என இரண்டுமே எனக்கு நிறையா புதிய அனுபவங்களைத் தந்தது. புதுப்புது மனிதர்கள், புதுப்புது சிந்தனைகள், புதுப்புது திறமைகள் என வாழ்க்கைக் கல்வி கற்ற காலமிது.
கல்லூரி வாழ்விலுள்ள எந்த சுகதுக்கங்களையும் நாங்கள் தவறவிட்வில்லை. கேலி கிணடல் கும்மாலம் என அனைத்தையும் அனுபவித்தோம். நண்பன் வீட்டு எவ்வளவு தூரமானாலும் அவன் வீட்டு விசேசத்துக்கு நாங்கள் ஆசராகிவிடுவோம். நண்பனோடு மட்டுமில்லாமல் அவனுடைய குடும்பத்துடனும் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். இப்படி ஆரம்பித்த பல நட்பு என்னைக் கடந்து என் குடும்ப நட்பாகவே பிற்காலத்தில் மாறியது.
என் எதிர்காலத்தை எனக்கு காட்டியது, நிகழ்காலத்தை மகிழ்ச்சியாய் மாற்றியது, கல்லூரியைத் தாண்டி நிலைத்து நிற்க்கிறது இந்த நட்பு..
Sep 14, 2007
நட்பு - கல்லூரி.
பிரிவு : தொடர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment