ஓர் முடிவை நோக்கிய என் மூன்று மாத கால நீண்ட பயணம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரப்போகிறது. படித்தது, கேட்டது, பார்த்ததை வைத்து எனக்குள் அமெரிக்க வாழ்க்கையைப் பற்றிய ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த எதிர்பார்ப்பையும் மீறி என்னை கவர்ந்த விசயங்கள் இதோ.
1) இங்கு பல விமானங்களில் வரிசை எண் 12க்கு அடுத்துள்ள வரிசை எண் 14. 13 என்பது இங்கு இராசியில்லாத எண் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம். (முடநம்பிக்கை உலகம் எங்கும் பறவிக்கிடக்கிறது.)
2) சராசரி அமெரிக்கனின் பார்வையில் இந்தியர்கள் அனைவரும் நன்று படித்தவர்கள். இதை என்னிடம் வெளிப்படுத்திய உந்தூர்தி ஓட்டுநர் சொன்ன இன்னொரு செய்தி இன்னமும் அதிர்ச்சிகரமாக இருந்தது. 'இந்தியதர்கள் அனைவரும் உடல் பருமனற்றவர்கள்.' (ஐயா, நீர் என் தேசம் வந்து பாரும்!!!)
3) இங்கு வாழும் என்னாட்டு சகோதரர்கள் எனக்கு தராத பரிசை அமெரிக்கர்கள் தந்தார்கள், புன்னகை.!!!
4) காலை மாலை மதியம் என கால நெரமில்லாமல் ஓட்டப்பயிற்சி செயயும் ஓர் கூட்டம். உடல் பருமனால் நடக்கக்கூட முடியாமல் சக்கர நாற்காலியில் போகும் ஓர் கூட்டம். (குறிப்பு : இரண்டாம் கூட்டத்தில் ஆட்கள் அதிகம்.)
5) இங்கு பள்ளி சிறுவர்கள் செல்லும் பேருந்துக்கு உரிய மரியாதை உண்டு. பேருந்தில் குழந்தைகள் ஏறும் போதும், இறங்கும் போதும் மற்ற வாகனங்கள் நின்று காத்திருக்க வேண்டும்.