'தி.நகர்' என்றவுடன் சென்னை வாசிகளுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது எது? என்று பட்டியல் போட்டால் 'மக்கள் நெரிசல்'லுக்குத் - குறிப்பாக பண்டிகை காலங்களில் - தான் முதலிடம். அதன் பிறகு தான் இரங்கநாதன் தெரு, சரவணா ஸ்டோர்ஸ் எல்லாம்.
மக்கள் நெரிசலுக்கு பயந்து திபாவளி 'shopping'யை வேளச்சேரியிலே முடித்துவிடலாம் என்று சென்றால் இங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பிரபலமான கடைகள் அதன் கிளைகளை இங்கு துவங்கி உள்ளது. உதாரணமாக 'Naidu Hall' மற்றும் 'Basics'. இந்த கூட்டத்தால் தி-நகருக்கு செல்லும் கூட்டம் குறைந்திருக்கிறதா என்றால் அறவே இல்லை.
புற்றீசல் போல் எங்கிருந்துதான் வருகிறார்களோ?
4 வருடத்துக்கு முன்னால் நான் சென்னை வந்தபோது அடையாளம் தெரியாமலிருந்த 'By-Pass Raod' இன்று இன்னொரு 'இரங்கநாதன் தெரு'வாக உருமாறி வருகிறது.
Nov 5, 2007
தி.நகர் - 2!!!
பிரிவு : இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment