Nov 14, 2007

A day with least significant?

Today is Children's Day but what is signifies to the children of this country. Only the kids at schools, who already got the due respect for their childhood, celebrate.

Until kids at traffic signals begging for their life's, at factories killing their childhood, under roof being exploited are freed, the children's day will not make a significant impact on the society.

Nov 13, 2007

Leadership!!!

An extract of an interesting article about 'Situation Leadership' I read today.

Leadership is in the ability to win in unexpected situations, to be creative when no solution seems apparent and to feel in control of situation.

Situation Leadership is to customize one's approach to the situation to get the best of what is available.

Leadership is a cruel game. You have to complete the puzzle, but not all the pieces are with you. So, your success is no more depends only on you and yet anyone's failure is your failure.

Nov 10, 2007

மாறாதக்கோட்டை!!!

கதை:
ஹீரோ ஒரு தாதாவின் அடியாட்களை அடித்து விட தாதா அவனை பழி வாங்க தொரத்துகிறான். (சண்டைக்கோழி 2?). நீதிமன்ற ஆனையின் படி காவல் நிலையத்தில் கையெழுத்திட மலைக்கோட்டை வந்த ஹிரோ காதல், இன்னொரு வில்லன் என பல சவால்களை தாண்டி சுபம்.

புதுமை:
சுபத்திற்கு பின் வந்த காட்சிகள். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் எப்படி மாறினார்கள் என்று காட்டியது புதுமையாகவும், நன்றாகவும் இருந்தது. 'Climax'ல் வில்லனை சுட்டதிற்கு போலீஸ் சித்தப்பா கூறிய காரணத்திற்கு audience மத்தியில் கை தடடல் உறுதி.

சொதப்பல்:
விசால் புதிதாக 'Comedy' செய்ய முயற்சி செய்திருந்தாலும் அவர் 'body languages'கு இந்த வகை 'comedy' ஒந்து வரவில்லை.

மாறாத பழமை:
1) 'இவனை அடக்க ஒரு ஆம்பிள்ளை வருவான்' என்று பாதிக்கப்பட்ட ஒரு பெண் கூறியவுடன் ஹீரோவின் அறிமுகப் பாடல்.
2) சின்ன பொடியன் ஒருவனை அழைத்துக்கொண்டு ஹீரோ ஹீரோயினை தேடுவது.
3) காதலில் தோற்றவன் தன் குழந்தைக்கு காதலியின் பெயரை வைப்பது. (வேற வழியே இல்லையா?)

ஆக மொத்ததில் 'மலைக்கோட்டை' புதிய கல்லில் புளித்துப்போன பழைய மாவு. ஆனாலும் ரூசிக்கத்தான் செய்கிறது.

Nov 9, 2007

கொண்டாடம்!!!

என் நினைவில் உள்ள வரை இந்தியா முழுவதும் தீபாவளி ஒரே நாளில் தான் கொண்டாடப்படும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தென்னிந்தியாவில் நேற்றும் பிற பகுதிகளில் இன்றும் கொண்டாடப்படுகிறது.

எது எப்படியோ, நாங்கள் நேற்று நல்ல படியாக பண்டிகையை கொண்டாடினோம்.

கிரித்திக், வெடி சத்தம் கேட்கும் ஒவ்வொரு முறையும் பயத்துடன் எங்கள் கால்களை கட்டிக்கொண்டான்.
மாலையில் அவன் கையிலிருந்த மத்தாப்பை விட முகத்தில் பிரகாசம் அதிகம்.
அவன் பேரைச் சொல்லி ஹேமா பட்டாசுக்கள் விட்டு ஒரு கலக்கு கலக்கீட்டாள்.

Nov 7, 2007

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

சத்தம் முழங்க, தீபம்கள் ஒளிர, கண்களுக்கு விருந்தாய் மத்தாப்பூகள் சிலுர்க்க

அனைவரும் தீபாவளியை பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட எங்கள் நல்வாழ்த்துக்கள்.

Oppurtunities!

There is an old story about the perceptions & opportunities. A barber saw no opportunity in a city where all the residents grew long hair and mustache. Whereas, the second barber saw the same city as a big business prospect.

If you have the hunger for success, you will see opportunities everywhere and everyday to grab them. Using the given opportunity to the best of your potential will show you the way to success. It is all up to you.

Otherwise, you will always be busy waiting for the opportunity to knock your doors. Don't blame others for lack of opportunity.

Nov 5, 2007

தி.நகர் - 2!!!

'தி.நகர்' என்றவுடன் சென்னை வாசிகளுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது எது? என்று பட்டியல் போட்டால் 'மக்கள் நெரிசல்'லுக்குத் - குறிப்பாக பண்டிகை காலங்களில் - தான் முதலிடம். அதன் பிறகு தான் இரங்கநாதன் தெரு, சரவணா ஸ்டோர்ஸ் எல்லாம்.

மக்கள் நெரிசலுக்கு பயந்து திபாவளி 'shopping'யை வேளச்சேரியிலே முடித்துவிடலாம் என்று சென்றால் இங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பிரபலமான கடைகள் அதன் கிளைகளை இங்கு துவங்கி உள்ளது. உதாரணமாக 'Naidu Hall' மற்றும் 'Basics'. இந்த கூட்டத்தால் தி-நகருக்கு செல்லும் கூட்டம் குறைந்திருக்கிறதா என்றால் அறவே இல்லை.

புற்றீசல் போல் எங்கிருந்துதான் வருகிறார்களோ?

4 வருடத்துக்கு முன்னால் நான் சென்னை வந்தபோது அடையாளம் தெரியாமலிருந்த 'By-Pass Raod' இன்று இன்னொரு 'இரங்கநாதன் தெரு'வாக உருமாறி வருகிறது.

Nov 2, 2007

யார் குற்றம்?

நான் சமீபத்தில் திரைக்கு வந்த 'கற்றது தமிழ்'யை இன்னமும் பார்க்கவில்லை என்றாலும் அதைப்பற்றிய விமர்சனம், இயக்குனர் பேட்டி பார்த்திருக்கிறேன். மென்போருள் துறையின் மீது மற்றவர்களுக்குள்ள கோபம் மற்றும் பொறாமையின் வெளிப்பாடாக அமைந்தது தான் இந்த திரைப்படம்.

விலைவாசி உயர்வுக்கு எங்கள் துறையினர் தான் முக்கிய காரணம் என்ற உணர்வு மக்களிடையே உள்ளதை யாராலும் மறுக்கயியலாது.

மென்போருள் ஊழியன் என்று தெரிந்தவுடன் வீட்டு வாடகையை உயர்த்தும் உரிமையாளர்கள் உண்டா, இல்லயா?

சொகுசு பேருந்தில் பயணம் செய்ய வரும் எங்கள் நண்பர்களிடம் அதிக விலைக்கு பயணச்சீட்டை விற்று லாபம் பார்க்கும் முதலாளிகள் உண்டா, இல்லயா?

'ரியல் எஸ்டேட்' என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பல் உண்டா, இல்லயா?

எங்கள் அலுவலகம் தேடி வந்து எங்களை கடனாளிகளாக்கும் வங்கிகள் உண்டா, இல்லயா?

இதையெல்லாம் சொல்லி விலை உயர்வுக்கு நாங்கள் காரணமில்லை என்று வாதாடவில்லை. நாங்கள் மட்டும் காரணமில்லை என்றே கூறுகிறேன்.

எங்களின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து விட்டு இந்த சமுகம் எங்களை விமர்சிக்கிறது.

படித்து முடித்து வேலை கிடைக்காமல் தவிக்கும் நண்பர்களை பற்றி அவர்களுக்கு தெரியாது.

இயலாதவர்களுக்கு (தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ) உதவும் எங்கள் நண்பர்களை பற்றி அவர்களுக்கு தெரியாது.

இரவு பகல் என்று பார்க்காமல் உழைக்கும் நண்பர்களை பற்றி அவர்களுக்கு தெரியாது.

பாசத்துக்கும் அரவனைப்புக்கும் ஏங்கும் நண்பர்களை பற்றி அவர்களுக்கு தெரியாது.

எங்களை அரவனைக்காவிட்டால் பரவாயில்லை சமூகமே! பழி கூறாதே!