Aug 29, 2007

எது குற்றம்?

நேற்று மதிய உணவு இடைவேலையின் போது அந்த கொடுமையை செய்திகள் தொலைகாட்சி ஒன்றில் பார்க்கநேர்ந்தது.

ஒரு கூட்டம் ஒருவனை சரமாரியாக அடித்துக்கொண்டிருந்தது. அடிகள் ஒவ்வொன்றும் பலமாக அவன் முகத்திலும், உடம்பிலும் விழுந்தன. சினிமாவில் கூட நாயகன் ஒருவனை அப்படி அடித்திருக்கமாட்டான். அதைவிட கொடுமை, ஒரு காவல் அதிகாரி அவனை தன் இருசக்கர வாகனத்தில் கட்டி நடு ரோட்டில் இழுத்து சென்றதுதான். இதை பார்த்த நாங்கள் ஒரு நிமிடம் உரைந்து போனோம்.

இக் கொடுமைகளுக்கு ஆளான அவன் கொலை செய்யவில்லை, கொள்ளையடிக்கவில்லை, ஊரை ஏமாற்றவில்லை, நாட்டை சுரண்டவில்லை...

அவன் செய்த தவறு தன் பசிக்காக பண்ணிய திருட்டு. அது தவறே அனாலும் இவ்வளவு பெரிய தண்டனையா?! இதைவிட கொடுமைகள் செய்த எத்தனையோ குற்றவாளிகள் சுதந்திரமாக இருக்கும்போது அவன் மட்டும் என்ன பாவம் செய்தான்?

No comments: