May 14, 2009

வாக்காளர் பார்வைக்கு,

வாக்காளர் பட்டியலில் நமது பேருள்ளதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள வாக்குச்சாவடிக்கு போக வேண்டிய அவசியமில்லை. இணைய தாளத்தில் இதை அறிந்து கொள்ள: http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp

May 9, 2009

அரசியல் நெடி...

1: தமிழ் பாராட்டும் கலைஞராட்சியில் சாலைகள் வழிகாட்டும் -
ஆங்கிலததில்!!!

2: இலவசங்களுக்கு விலைபோகும் ஓட்டாளிகளுள்ள வரை
நாம் ஓட்டாண்டிகள் தான்.

3: வாக்குறுதிக்கு வாக்களிக்காமல், வளமான வாழ்வுக்கு வாக்களியுங்கள்.

4: வாக்களிப்பது நம் கடமை
நல்லாட்சி நமது உரிமை.

Nov 15, 2008

நிலவில் என் தேசம்!

1) மூவர்ணக்கொடி!
நிலவொளியில் பறக்கத் தான் தடை, நிலவில்லை.

2) நிலவில் வடை சுட்டப் பாட்டி இனி
கதைகளில் மட்டு மல்ல.

Sep 5, 2008

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

எனக்கு புத்தக பாடத்தையும், புத்திப் பாடத்தையும் கற்பித்த அனைத்த நல்லுள்ளம் கொண்ட ஆசிரியர்களுக்கும் எனினிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

Aug 11, 2008

மழலை மொழி.

சனிக்கிழமை அன்று தன் முன்றாமாண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் கிரித்திக் கடந்த சில மாதங்களாக தன் மழலை மொழியில் பேச ஆரம்பித்திருக்கிறான். கடந்த முன்று மாத காலம் இவன் மழலை மொழியை என்னால் அனுபவிக்க முடியாமல் தவித்தேன்.

அவன் மொழியில் மட்டுமுள்ள வார்த்தைகள்.

பாசா : சாப்பாடு
த்தா : வேண்டாம், மாட்டேன், இல்லை...
தாப் : தொப்பி
பூ: உந்தூர்தி
லால: லாரி
மன்டன்டு: பிஸ்கட்
டக்டர்: மிதிவண்டி

தொடரும்...